விஜய் சேதுபதி படத்தை புகழ்ந்த விஜய் இயக்குனர்

250

விஜய் சேதுபதி படத்தை புகழ்ந்த விஜய் இயக்குனர் - Cineulagam

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் தெறி.இப்படத்தின் இயக்குனர் அட்லி கடந்த சில நாட்களாக இப்படத்தின் பாடல் வரி மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்.

இன்றும் வழக்கம்போல இப்படத்தின் Updates க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி படத்தை பற்றி கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காதலும் கடந்து போகும். சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் வந்த படத்தில் இது தான் சிறந்த ரொமாண்டிக் காமெடி படம் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் நலனையும் பாராட்டியுள்ளார்.

SHARE