விஜய் சேதுபதி வெற்றி கூட்டணியில் – அடுத்த திரைப்படம் அறிவிப்பு!

168
விஜய் சேதுபதி, அடுத்ததாக வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றார்.

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ’96’ திரைப்படம் வெற்றிகரமா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தப்படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர்டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ போன்ற திரைப்படங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளிவரயிருக்கின்றது.

மேலும் சூப்பஸ்டார் ரஜனிகாந்தின் ‘பேட்ட’ சிரஞ்சீவியுடன் ‘நரசிம்மரெட்டி’ போன்ற திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி வெற்றித்திரைப்படமாக மாறியது.

இந்தநிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கின்றார்.

யுவன் சங்கர் ராஜாவுடன் இளையராஜாவும் இணைந்து இந்த திரைப்படத்துக்கு இசையமைக்க இருக்கின்றார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா , இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SHARE