விஜய், தனுஷின் தங்கைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

169

சினிமா நடிகர்கள், நடிகர்கள் படங்களில் நடிப்பது போக வேறு ஏதாவது ஒரு தொழிலை கைவசம் வைத்திருப்பார்கள். இது பலருக்கும் தெரியாது. சரி. சீரியல், சினிமா என கலக்கும் இந்த நடிகைகள் நடிப்பை தவிற என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம்.

தேவதர்ஷினி

பலருக்கும் தெரிந்த முகமான தேவதர்ஷினி காமெடி, குணச்சித்திர வேடங்கள் என கலக்கி வருகிறார். மர்மதேசம் சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதில் நடித்த சேத்தனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

காஞ்சனா படத்திற்கு பிறகு எம்.எஸ்.சி சைக்காலஜி படத்தவர், தற்போது மேலும் ஒரு டிப்ளமோ படித்து வருகிறார். விரைவில் கவுன்சிலிங் செண்டர் ஆரம்பித்து பலருக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும் அவரின் ஆசையாம்.

ஸ்ரீதேவி

இவர் வேறு யாருமல்ல புதுக்கோட்டை சரவணன் படத்தில் தனுஷுக்கு தங்கச்சியாக அறிமுகமானவர். செல்லமடி நீ எனக்கு சீரியல் தான் இவருக்கு ஆரம்பம். தற்போது ராஜா ராணியிலும் நடித்துவருகிறார்.

இவர் சைக்காலஜி, கிரிமினாலஜி, நியூட்ரிஷன் என பல டிகிரிகளை கையில் வைத்துள்ளார். இதுபோல தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம். மேலும் தன் அம்மாவுக்காக ஊறுகாய் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறாராம்.

ஜெனிஃபர்

வாங்க கில்லை விஜய் தங்கச்சி. இவரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சில படங்களில் ஹீரீயினாக நடித்து செட்டாகாததால், மீண்டும் சீரியலுக்கே வந்துவிட்டார். 10 வருடங்களாக நாடகம், டிவி ஷோ செய்துவந்தவர் கூட்டத்தில் ஒருவன் படத்தில் நடித்துள்ளார்.

கேளடி கண்மணி சீரியலில் நடித்து வரும் இவர் கபடி, இது எப்படி இருக்கு போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். ஃபேஷன் டிசைனில் ஆர்வம் கொண்ட ஜெனி வேட்டிங் பிரைடல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இப்போது இந்த தொழில் மிகவும் கைகொடுக்க சினிமாவில் நடிக்க நேரம் இல்லாத நிலையில் இருக்கிறாராம்.

SHARE