இளையதளபதி விஜய் தற்போது தெறி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதால் அடுத்தகட்டமாக பரதன் படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன.
அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கும் விஜய் 60இப்படத்தில் சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளார். நகைச்சுவை நடிகராக சதிஷ் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகி வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. காஜல் உட்பட முன்னணி நடிகைகளிடம் பேச்சு வந்தது.
ஆனால் படக்குழுவினர் இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்காத புதிய நடிகைகளாக இருந்தால் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கும் என்று முடிவெடுத்தனாராம்.
விஜய்யும் சம்மதிக்க ரஜினிமுருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் உடனடியாக அவரிடம் பேசி ஒப்பந்தம் செய்து விட்டனராம்.