தென்னிந்திய சினிமாவில் நடனம் என்றாலே முதலில் நினைவிற்கு வருதுவது விஜய் தான். எந்த நடிகர் நன்றாக ஆடினாலும் முதலில் விஜய்யுடன் தான் ஒப்பிடுவார்கள்.
அந்த வகையில் சந்தானம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், இதில் இவரிடம் ‘தில்லுக்கு துட்டு படத்தில் விஜய் போல் நடனமாடியுள்ளீர்கள்’ என கூறியுள்ளனர்.
உடனே அவர் ‘எப்போது நான் தான் எல்லோரையும் கலாய்ப்பேன், நீங்கள் என்னை கலாய்க்கிறீர்கள், அவர் போல் தான் யாராலும் நடனமாட முடியாது, நான் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நடனம் கற்று வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.