இளைய தளபதி விஜய்க்கு திரையுலகத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இதில் ராதிகா சரத்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய்யை எனக்கு சிறு வயது முதலே தெரியும்.
அவருடைய தந்தை இயக்கத்தில் நடித்துள்ளேன், அப்போது அவர் எத்தனை எளிமையாக இருந்தாரோ அதேபோல் தான் தற்போதும் உள்ளார், அவர் நடிப்புத்திறமை மென்மேலும் உயர்ந்துள்ளது’ என கூறியுள்ளார்.