
விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்டமாக தொடர்ந்து அமைந்து வருகிறது. சமீபத்தில் பைரவா படம் முதலாம் ஆண்டின் நிறைவை கொண்டாடினார்கள்.
அதனையடுத்து மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரபல பத்திரிக்கை ஒன்று அறிவித்தது. ஆளப்போறான் தமிழன் பாடல் உலகில் பலரின் கவனத்தை திருப்பி ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டது.
விஜய்யும் மெர்சல் பட சர்ச்சைக்கு இவ்விழாவில் விளக்கம் கூறினார். இதனை தொடர்ந்து பொங்கல் விழாவுக்கு ரசிகைகள் வீட்டு வாசலில் மெர்சல் விஜய் படத்தை வரைந்து ஆளப்போறான் தமிழன் என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் கனடா நாட்டு பிரதமர் தமிழர்களின் பெருமையையும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் கூறி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். விஜய் ரசிகர்கள் இதை கொண்டாட, பாடலாசிரியர் விவேக் ரீட்வீட் செய்துள்ளார்.