ரஜினி தன்னுடைய ரசிகர்களை 4வது நாளாக சந்தித்து வருகிறார். இன்று மேடையில் பேசும்போது ஒரு சுவாரஸ்ய கதையை பகிர்ந்துள்ளார். அண்ணாமலை படத்தின் மாபெறும் வெற்றிக்கு பிறகு நான் சிவாஜி கணேசன் அவர்களுடன் கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தேன்.
நான் வருவதை அரிந்த ரசிகர்கள் என்னை புகழ்ந்து பேசினார்கள். சிவாஜி அவர்கள் என்னுடன் இருக்கும் போது ரசிகர்கள் கத்தியது எனக்கு சங்கடமாக இருந்தது. அப்போது சிவாஜி அவர்கள், எதற்கு பயப்படுகிறாய், இது உன்னுடைய நேரம், நீ கடினமாக உழைத்திருக்கிறாய். நானும் என்னுடைய காலத்தில் உழைத்திருக்கிறேன், இது உன்னுடைய நேரம் கொண்டாடு என கூறினார்.
சமீபத்தில் நான் கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அப்போது என்னை கொஞ்ச நேரம் கழித்து வரச் சொன்னார்கள். ஏனெனில் அங்கு எனக்கு முன் ஒரு நடிகர் வருவதாக கூறப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு சூழ்ந்திருக்கின்றனர் என்றனர். நேரம் தான், எல்லாவற்றையும் மாற்றும் என்று பேசினார்.
ரஜினியின் பேச்சை கேட்டதும் விஜய் ரசிகர்கள் தளபதியை பற்றி தான் கூறியுள்ளார் என்று அவர் கோயம்புத்தூர் சென்ற வீடியோவை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.