சினிமாவில் முழு ஸ்ட்ரைக் என்பதால் ஒரு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கூட நடக்கவில்லை. ஸ்ட்ரைக் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்க அனுமதி பெற்று விஜய் 62 முதல் சில படங்களின் படப்பிடிப்பு 2,3 நாட்களுக்கு நடந்தது.
அதற்கே பிரபலங்கள் பலபேர் அதென்ன அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி என்று சண்டை போட்டார்கள்.
படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர்கள் இப்போது பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அப்படி விஜய்யின் 62வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் பிரேம் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், விஜய் அவர்களை நேரில் சந்தித்ததும் முதலில் எனக்கு மூன்று வார்த்தைகள் நியாபகம் வந்தது, Cool, Calm, Composed. என்னை பார்த்ததும் நண்பா விக்ரம் வேதா படத்தில் சூப்பராக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டினார்.
விஜய் அவர்கள் சில சீன்கள் நடித்தார் நான் அப்படி ரசித்தேன், அட பிரமாதமாக இருக்கே என்பது போல் ரசித்ததாக கூறியுள்ளார்.