விஜய் 62 தகவல்கள் பொய்..! இந்த படத்தில் யாரும் ஒப்பந்தமாகவில்லை

212

விஜய்க்கு பல ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்தவர் என்றால் ஏ.ஆர்.முருகதாஸ்தான் தான். குறிப்பாக துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களுமே பாரிய அளவில் வசூலினை குவித்தது.

இந்த நிலையில் அவர் மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைப்பதாக முன்னர் நாம் தெரிவித்திருந்தோம், அவ்வாறே, லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸ் தயாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா கதாநாயகி என்றும், துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவை அனைத்தும் பொய் என முருகதாஸ் கூட்டணி தற்போது செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது, “அடுத்ததாக விஜய் படத்தை இயக்குகிறேன். இதுமட்டுமே நிஜம். இதுவரை வேறு யாரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை” என முருகதாஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE