விஜய்62 வெளிவந்த புகைப்படத்தின் மூலம் கசிந்த கதாபாத்திர தகவல்

173

மெர்சல் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் மீண்டும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் என்ற செய்தி வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் சந்தோசத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்த போட்டோஷூட் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவிவருகிறது.

இதில் விஜய் மிகவும் ஸ்டைலிஷாக கையில் சூட்கேசை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் விஜய் ஒரு பிசினஸ்மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE