விடுதலைப்புலிகளின் சரணடைந்த முக்கிய தளபதிகள், போராளிகள் கோத்தபாஜவின் சகாக்களே! இவர்களைக் கைது செய்வது மைத்திரி அரசுக்கு ஆபத்தான செயல்.

213

அண்மைக்காலமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தளபதி ராம், தளபதி நகுலன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கலையரசன் ஆகிய மூவரும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் இராணுவ ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தையும், அதன் உண்மை ரகசியங்களையும் காட்டிக் கொடுத்தவர்களே.

nagulan-ram01

கருணா, பிள்ளையான், மார்க்கண்டன், மங்களம் மாஸ்டர், ஜோஜ் மாஸ்டர், தயாமாஸ்டர், கே.பி போன்றவர்களைவிட இவர்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ இரகசியங்களை கோத்தபாஜ ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டவர்கள்.

Gota-Karuna1

மைத்திரி அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் தேர்தல் காலத்தில் பாரிய வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் இவர்களே. 2015 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பிள்ளையானை வைத்து மைத்திரிபால சிறிசேன அவர்களை கொலை செய்ய முயற்சித்தது யாவரும் அறிந்ததே. நிலமை இவ்வாறு இருக்க மைத்திரி அரசாங்கத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் அதிதீவிரமாக கோத்தபாஜ ராஜபக்ஷ அவர்கள் முன்னாள் போராளிகளை வைத்து சதி முயற்சி ஒன்றையும் முயற்சித்திருந்தார். இந்தச் சதி முயற்சியானது ரணில் விக்கிரம சிங்காவினால் முறியறிக்கப்பட்டது.

download (1)

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்குச் செல்ல கோத்தபாஜ ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ தலைமறைவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ‘அவன் காட்’ என்ற கப்பலில் வந்த ஆயுதங்கள் அணைத்தும் விடுதலைப்புலிகளினுடைய முன்னாள் போராளிகள் கைக்கே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் பலபேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான விசாரணை இன்னமும் தொடர்கின்றது. இதில் உள்ள இரகசியத் திட்டம் என்னவென்றால் இவ்வாறான ஒரு குழப்ப சூழ்நிலையை போராளிகள் மத்தியில் உருவாக்கிவிட்டு அப்பொழுது வடக்குக்கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் மைத்திரி அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் இவ்வாறு நடைபெறுகின்ற பொழுது ஆட்சி மாற்றம் ஒன்றிற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படும். பதினொராயிரம் போராளிகளுக்கு மேற்பட்டோர் வடகிழக்கு பிரதேத்தில் இருக்கின்றார்கள். இவர்களை மீளவும் கைது செய்யும் விடையத்தை எந்தப் பெற்றாரும் அனுமதிக்கமாட்டார்கள்.

Ranil-maithria

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு இவ்வாறு அராஜகத்தை இவ் அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாக வெளிநாடுகளுக்கு காண்பிக்கப்படும். இதனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோற்கடிக்கப்படும். மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஆட்சி அமைப்பார்.

munnal-poralikal
புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட போராளிகள் அனைவரும் கோத்தபாஜ ராஜபக்ஷ அவர்களின் விசேட கண்காணிப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போராளிகள் அணைவரும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு இனப்படுகொலையாளி என்று கூறியது இல்லை. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரும்பொழுது இப்போராளிகள், அவர்களது குடும்பங்கள் சுந்திரமாக நடமாடமுடியும்.

LTTE-money-provider-KP

குறிப்பாக கருணா, பிள்ளையான் ஆகியோர் அமைச்சுப் பதவியில் இருப்பார்கள். கே.பி, யோச் மாஸ்டர், தயா மாஸ்டர், இராம், நகுலன் போன்றோர் தமது புலனாய்வு நடவடிக்கைகளை மீண்டும் தொடர்ந்து கொண்டு வருவார்கள். நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறு போராளிகளைக் கைது செய்வதனால் தனக்குத் தானே தலையில் மண்ணைவாரிப் போட்டுக் கொள்ளும் ஒரு செயலாகவே அமைகின்றது.
இதில் குறிப்பாக 200 போராளிகளை விடுதலை செய்யமுடியாத அளவிற்கு இந்த அரசாங்கம் இருப்பதும் கவலைக்குரிய விடயம் தான். இதில் முக்கியவிடயம் என்னவென்றால் 11,000.00 போராளிகளை புனர்வழ்வு அழித்து சமூகமயமாக்கிய பெருமை மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும். இந்த அரசாங்கம் நிதானமாகச் செயற்படவேண்டும். இல்லையேல் இவ் அரசாங்கத்திற்கான போராட்டம் இடைநடுவே வெடிக்கும் இதற்கு கோத்தபாஜ ராஜபக்ஷ சீனாவின் உதவியைப் பெற்றுக் கொள்வார். மீண்டும் நாட்டில் புலிகள் தலைதூக்கி விட்டார்கள் என்ற செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து தமது அரசைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மஹிந்த அரசாங்கம் கூடிய கவணம் செலுத்தும் என்பதேயாகும்.
கோத்தபாஜ ராணுவத்தளபதியாக இருந்தபொழுது கருணா குழுவிற்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் இக்காணொளியில் காணலாம்….

-மறவன்-

SHARE