விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை சார்ந்தவர்களைக் அரசாங்கம் கைது செய்வது அடுத்த போருக்கான ஆயத்தமா?

360

அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனாய்வுத்துறையினர் செயற்பட்டு வருவதால் அவர்களுடைய செயற்பாட்டை முடக்குவதற்காக அரசாங்கம் மேதினத்திற்கு முன்னர் கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதகெதியில் மேற்கொண்டுள்ளது.

xltte-1

விடுதலைப்புலிகளின் விசேட புலனாய்வுப் பிரிவினராகக் கருதப்பட்ட நகரப் புலனாய்வு, படையப் புலனாய்வு, உள்ளகப் புலனாய்வு, வெளிக்களப் புலனாய்வு, இரகசியப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு, கட்டமைப்புப் புலனாய்வு, தேசியப் புலனாய்வு, அரசியல்ப் புலனாய்வு, மத்திய புலனாய்வு என பன்னிரண்டு புலனாய்வுப் படைப்பிரிவுகள் இயங்கிவந்த நிலையில் இவையணைத்திற்கும் ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளின் புலனாய்வுக் கட்டமைப்பினுடைய அல்பா வீற்றா வரிசையில் டெசி என்று அழைக்கப்படுவதே விடுதலைப்புலிகளின் புலனாய்வுக் கட்டமைப்பினுடைய குறியீட்டுப் பெயர் இந்த டெசிப் புலனாய்வில் அறுபத்தி நான்கு பிரிவுகள் உள்ளது.

ltte-20140430-1
சண்டைக் களத்தில்ப் பயன்படுத்தபடும் டெசி இரகசியக் குறியீடுகள் பயன்படுத்துவதில் தளபதி ரமேஸ், சாள்ஸ், ஜெயம், தீபன், சங்கர், துரோனர் போன்றோர் அதி தேர்ச்சி பெற்றவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புலனாய்வுக் கட்டமைப்பினருடைய செயற்பாடுகள் என்பது பரந்தளவில் இருப்பதனால் இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தினாலோ சர்வதேசத்தினாலோ முடியாத விடயமாகும். தமிழீழ விடுதலைப்புலிகளிளுடைய ஆயுதப்போராட்டம் என்பது நீண்ட வளர்ச்சி கொண்டது. இப்போராட்டமானது முப்பது வருடகாலங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. இதனை குறுகிய கால எல்லைக்குள் மழுங்கடித்துவிட அரசாங்கம் முயற்சித்தால் அது முடியாத காரியம். எந்தொரு நாட்டிலும் ஆயுதக்குழுக்களையோ அல்லது பயங்கர வாதிகளையோ முற்றாக ஒழித்த வரலாறு இல்லை.

fomer_ltte_caders

மக்கள் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் பலம்வாய்ந்த ஆயுத அமைப்பாக உள்ளுரிலும் சர்வதேசத்திலும் வளர்ச்சி கண்டனர். சர்வதேச நாடுகள் தமக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் என்ற காரணத்தினால் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தை அழித்தொழிக்கும் நடிவடிக்கையை மேற்கொண்டது. போராட்டக் கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டலும் ஒரு நாட்டினுடைய புலனாய்வுக் கட்டமைப்பை அழிப்பதென்பது எந்த அரசாங்கத்தினாலும் முடியாத காரியம். தற்பொழுது விடுதலைப் புலிகளுடைய செயற்பாடு என்பது நாற்பத்தைந்து நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஆதரவாக நானூற்றி ஐம்பது அமைப்புக்கள் இருக்கின்றது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம், தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் மைத்திரி அரசு தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைக் கைது செய்வது என்பது நாட்டில் மீண்டும் ஒரு குழப்பத்தை உருவாக்கும் நிலமையைத் தோற்றுவித்துள்ளது. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் மேற்கொள்ளப்படும் ஒரு சூழ்நிலையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவை அணைத்திற்கும் முக்கிய காரணம் பொட்டமானின் தலைமறைவேயாகும். புனர்வாழ்வு அளித்து விடுதலைசெய்யப்பட்ட பதினொராயிரம் போராளிகளும் பெரும் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகவே இவ் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

munnal-poralikal

மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய மனிதாபிமானம் கூட இவர்களுக்கு இல்லை என்றே என்னத்தோன்றுகின்றது. விடுதலைப்புலிகளினுடைய புலனாய்வுக் கட்டமைப்புத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமையினால் இதுவரையில் விடுதலைப்புலிகள் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் இவ் அரசாங்கம் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளை மீண்டும் கைது செய்வதனை நிறுத்தவேண்டும். ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட இருநூறு போராளிகள் இன்னமும் சிறைச்சாலைகளில் இருந்து வருகின்றனர். வழக்குகள் கூட நிலுவையில் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தின் சமிக்கையாகவே முன்னாள் போராளிகள் கைது செய்யப்படும் விடயம் உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மௌனமாக இருப்பது பெரும் மனவேதனையைளித்துள்ளது. ஆயுதப்போராட்டம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்ற பழைய நிலமைக்கு தமிழினத்தை இட்டுச்செல்கின்றது.

IMG_5407
புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளை மீண்டும் கைது செய்யப்படும் நடவடிக்கையை அரசாங்கம் உடன் நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தப்படாவிடின் சர்வதேச நாடு ஒன்றின் உதவியுடன் மீண்டும் போர் வெடிக்கும் இதில் மாற்றம் இல்லை.

SHARE