முல்லைத்தீவு, மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்களில் கூடுதலானவை புலிகளின் முயற்சியினால் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கின்றது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு தினமும் அதிகளவு சிங்கள மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த போர்க்கருவிகளை சிங்கள மக்கள் பார்த்து ஒருவித பெருமிதமடைவதோடு விடுதலைப் புலிகளின் தொழிநூட்பத்திறன் பற்றி தமக்குள் அதிகம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் வெற்றிச் சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பசீலன்2000, சாரை ஏறிகணை செலுத்திகள் மற்றும் மொங்கான் போன்ற விசேட போர்க்கருவிகளும் அங்கே உள்ளமை குறிப்பிடத்தக்கது.