இலங்கையில் 69வது சுதந்திர தின நிகழ்வின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் இன்று..

338

 

இலங்கையில் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் கொழும்பு காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்றைய நிகழ்வின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக பயன்படுத்திய பாரிய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள புதிய யுத்த உபகரணங்களும் இன்றைய தினம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஏ.டபிள்யூ.எம்.பி ரொஷான் செனவிரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இடம்பெறும் சுதந்திரதின நிகழ்வின் போதும் தமிழ் மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE