விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டில் மரணம்?

161

விடுதலைப் புலிகள் அமைப்பின், கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேஷியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தியா என்ற பெண்ணே இந்தோனேஷியாவின் ஜகார்த்தா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “குறித்த பெண் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கையின் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் பாரமி குலதுங்க ஆகியோர்களது கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தியா என்கின்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற நிலையில், படகு விபத்துக்குள்ளானதில், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஷ்தானிகர் முகாமில் அவர் தங்கியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, குறித்த பெண் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE