விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரின் மீது பயங்கரவாத  தடை சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.

266

thaya-master

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றுவவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இணங்க, இந்த மாதம் 10ம் திகதி வவுனியாநீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டருக்குஎதிராக முன்னதாக பல குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்ருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின்நெருங்கிய நண்பர் தயா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE