விடுதலை புலிகளை அழிப்பதற்கு சீனா உதவியது: சரத் பொன்சேகா

309

இலங்கை சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேண வேண்டும் எனவும் 30 வருட தமிழ் சிங்கள யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர மிக உன்னதமான உதவிகளை சீனா செய்துள்ளது என பீல்ட் மால்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சீன அரச செய்தி நிறுவனமான சின்சூவாவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனாவின் உதவி இல்லையென்றால் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவானது மிக பழமையானதாகவும், வலிமையானதாகவும் இருக்கின்றது. உள்நாட்டு மோதல்களை முடிவுக்கொண்டுவந்ததில் சீனாவின் பங்கு மிகபெரியதாகும்.

இதன் ஊடாகவே இலங்கை விடுதலைபுலிகளுக்கு எதிராக வெற்றிகளை குவிக்க முடிந்து.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கின்றது. ஆகவே சீனாவின் உதவிகளை மறந்துவிடக்கூடாது. சீனாவுடன் உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் மக்கள் போரின் 70 வது வெற்றி விழா கடந்த வியாழக்கிழமை பெய்ஜிங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட சரத் பொன்சேகா சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனா சிறப்பாக முன்னேறியுள்ளது.

வெளிநாடுகள் உடனான உறவுகளை வலுப்படுத்துவதிலும், உலக அமைதிக்கு பங்களிப்பு செய்வதிலும் பெறும் பங்காற்றியுள்ளது.

சீனா பெற்ற வரலாற்று வெற்றிகளை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சீனா ஜனாதிபதி ஜின்பிங்,

சீனாவின் இராணுவம் தொடர்பில் சரத்பொன்சேகா கூறியதனைப்போல சீனாவின் இராணுவம் மிக வலிமையானது எனவும், வரலாற்று சிறப்பு வாய்ந்தது எனவும், உலகில் ஒரு முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்தும் வல்லமை பொருந்தியது எனவும் கூறியுள்ளார்.

மேலும் சமாதானமான அபிவிறுத்திகளை முன்னெடுக்கும் வகையில் சீனாவின் இராணுவம் 300,000 துருப்புக்கள் குறைக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் மூலம் அவரது சேவை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்டதனையும் சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நடைப்பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள, புதிய அரசாங்கத்திற்கு, சர்வதேச சமூகத்துடன் உறவுகளை வலுப்படுத்தவும், அயல் நாடுகள் உடனான உறவுகளை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை ஏனைய நாடுகளுடன் அணிசாரா கொள்கையினை பின்பற்றி வருகின்றது.  ஆனால் பிராந்திய நாடுகளுடன் உறவினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிராந்திய நாடுகளில் நிலைப்பாடுகளை அங்கிகரிக்க வேண்டும். நாங்கள் இன்னும் ஒரு சிறிய நாட்டுக்குள் இருந்தாலும், நாங்கள் நீண்ட தூரம் போகவேண்டியிருக்கின்றது என மேலும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE