விடுதியில் அழகிகள் நடன விவகாரம் ‘

272

 

மதுபான விடுதியில் அழகிகள் நடனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மராட்டிய அரசை விமர்சித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’ கருத்து தெரிவித்து உள்ளது.

அழகிகள் நடனத்துக்கு தடை

மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனம் நடந்து வந்தது. குறிப்பாக தலைநகர் மும்பையில் உள்ள மதுபான விடுதிகளில் நடன அழகிகளோடு வாடிக்கையாளர்கள் கும்மாளம் போட்டு வந்தனர். இதனை கலாசார சீரழிவாக அரசு கருதியது. இதனையடுத்து மராட்டிய போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை மாநில அரசு சட்டசபையில் மசோதாவாக நிறைவேற்றியது.

இதன்படி 3 நட்சத்திர ஓட்டல்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள், நாடக அரங்குகள் கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-

*மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

* இரவு 11.30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். (முன்பு அதிகாலை 2 மணி வரை அனுமதி இருந்தது).

* மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.

* அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

* அழகிகள் நடனத்தின் போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.

* 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.

* 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

* லைசென்சு பெறாமல் சட்ட விரோதமாக விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்குள் டான்ஸ் பார்கள் தொடங்குவதற்கும் மராட்டிய அரசு தடை விதித்து உள்ளது.

மராட்டிய அரசு லைசென்சு விவகாரத்தில் கண்டிப்புடன் நடப்பதாகவும் கூறப்பட்டது.

‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’

இப்பிரச்சனை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று உள்ளது. மராட்டிய அரசின் புதிய மசோதாவை விமர்சித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’ என்று கருத்து கூறிஉள்ளது.

“ஆடுவது ஒரு தொழில், ஆட்டமானது ஆபாசமாக இருந்தால், பின்னர் அதுனுடயை சட்ட புனிதத்தை இழக்கும். அரசின் ஒழுங்குபடுத்து நடவடிக்கையானது தடையாக இருக்க முடியாது,” என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. மராட்டிய அரசின் நடவடிக்கையில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ள சுப்ரீம் கோர்ட்டு, “பிச்சை எடுப்பதை விட ஆடுவது சிறந்தது, வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்,” என்று கூறிஉள்ளது.

201604251633511

SHARE