கொழும்பில் உள்ள பிரபல Clique விடுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் அரசியல்வாதியின் மகன் தொடர்பிலான அனைத்து தகவல்களும் கொண்ட அறிக்கை பிரதமர் செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த அரசியல்வாதியின் மகன் தனது உறவினரான பாதாள உலக குழு செயற்பாட்டாளர் மற்றும் தனது தந்தையின் பாதுகாப்பு பிரிவு சிலருடன் அவர் இந்த விடுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடுதிக்குள் நுழைய மேற்கொண்ட முயற்சியை தடுத்தமையினாலே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.