பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ராக்கெட் ஒன்றை வடிவமைத்து நாசாவிற்கு அனுப்பியிருந்த நிலையில் தற்போது, நாசா அதற்கு பதில் கடிதம் அனுப்பி நெகிழ வைத்துள்ளது.
பிரித்தானியா Hertfordshire பகுதியை சேரந்த Idris Hylton என்ற 5 வயது சிறுவன் ராக்கெட் ஒன்றை வரைந்து, இதை போல் ராக்கெட் வடிவமைத்து விண்வெளிக்கு அனுப்புமாறும், தனக்கு விண்வெளி வீரர் உரிமம் கோரியும் நாசாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை கடந்த ஏப்ரல் மாதம் Idris Hyltonயின் தந்தை ஜமால் அமெரிக்காவில் உள்ள நாசாவின் தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளார்.
தற்போது, சிறுவனின் கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. நாசா அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தை Idris Hyltonயின் தந்தை ஜமால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பதில் கடிதத்தில் சிறுவனின் ராக்கெட் வடிவமைப்புக்காக நன்றி தெரிவித்துள்ள நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் சிஸ்டம்ஸ் பொறியாளர் கெவின் டிரூயின், இந்த ராக்கெட் வடிவமைப்பு ஒரு சிறந்த விண்வெளி வீரர் ஆவதற்கான தொடக்கம் என சிறுவனை ஊக்கப்படுத்தியுள்ளார்.
உங்களைப் போன்ற ஆர்வம் உள்ள இளம் நபர்களை நாங்கள் வரவேற்கிறோம். 110 சதவீதம் ஒரு நாள் நீங்கள் நாசாவில் சேரக்கூடும் என உற்சாகப்படுத்தியுள்ளார்.