சந்திரனின் துருவப் பகுதிகளிலுள்ள காணப்படும் நிழல்கள் ஆனது பனிக்கட்டிகளின் இருப்புக்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது மனிதன் மற்றும் ரோபோ ஆராய்ச்சியாளர்களால் அடையப்படக்கூடிய இடத்தில் காணப்படுகின்றது.
இது Proceedings of the National Academy of Sciences பக்கத்தில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
இங்கு ஆய்வாளர்கள் அமெரிக்கா மற்றும் இந்திய விண்கலங்களிலிருந்து தகவல்களைப் பெற்றிருந்தனர். பின்னர் இத் தரவுகளை கணனி உருவகப்படுத்தலுடன் தொடர்புபடுத்தி எவ்வாறு அந்த மேற்பரப்பு பனிக்கட்டிகள் ரோபோக்களுக்குத் தென்படக்கூடும் என்பதைப் பார்த்திருந்தனர்.
அவர்களது மாதிரியானது சந்திரனின் நூற்றுக்கணக்கான இடங்களில் அதன் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பிற்கு மிக நெருக்கமாக பனிக்கட்டிகள் மறைந்திருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பான மூலக் கட்டுரை Business Insider இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.