வித்தியாசமான சுவையில் ப்ரோக்கோலி பகோடா செய்வது எப்படி

339
சூப்பரான சத்தான ப்ரோக்கோலி பகோடா

ப்ரோக்கோலி பகோடா
தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி – 1 மற்றும் 1\2 கப்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு- 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி -1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா -1\4 தேக்கரண்டி
சுவைக்கேற்ப உப்பு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

ப்ரோக்கோலிia சுத்தம் செய்து, வெட்டி, பூக்களாகப் பிரிக்கவும். பூக்கள் பெரியதாக இருந்தால், சிறிதாக வெட்டவும்.

இதனை சூடான நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீரைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

வறுப்பதற்கு தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கவும்.

ஒவ்வொரு பூவாக மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நன்றாகப் பொரித்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான ப்ரோக்கோலி பகோடா ரெடி.
SHARE