வித்தியாவின் கொலையாளிகள் டக்ளஸ் ஊடாக கோத்தாவுடன் தொடர்பு…?

320

புங்குடு தீவில் வித்தியாவினை கொலை செய்த அனைத்து நபர்களுக்கும் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவோடு தொடர்பு இருப்பதாகவும். அதனூடாக ராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகளை இவர்கள் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து பாதுகாப்பு அமைச்சு கொடுக்கும் சில வேலைகளை, இவர்களை வைத்தே இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்து முடிக்கிறார்கள்.

இது மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் நடைபெற்று வந்தது என்றும். பின்னர் மைத்திரி பொறுப்பேற்ற பின்னர். இவர்கள் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைவிடப்பட்டு விட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்கள் யாழில் பல கொலைகளை இதற்கு முன்னர் செய்துள்ளார்களா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸ் தரப்போடு நெருங்கிய உறவை பேணிவரும் அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ,

தற்போது காவலில் உள்ள இக் கொலையாளிகள் சிலர் வாயை திறக்க ஆரம்பித்துள்ளதாகவும். பொலிசார் மேலும் சில தகவல்களை இவர்கள் ஊடாகப் பெற்றுவருவதாகவும்  தெரிவித்தார்.

SHARE