வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்! நீதிபதி இளஞ்செழியன் தாக்கப்பட்டதன் பின்னணி

269

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று நடைபெறவுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது குறித்த வழக்கினை நீதிவான் நீதிமன்றில் பல மாதங்களாக விசாரணை செய்த ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்றைய தினம் காலை சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது சனிக்கிழமை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அண்மைக் காலமாக தான் எடுக்கும் வழக்குகளுடன் தொடர்புடையவர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நீதிபதி இளஞ்செழியன் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

நீதிபதி இளஞ்செழியன் மீதே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாகியுள்ள சூழ்நிலையில், தனி நபர் ஒருவர் துணிச்சலாக நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

அது வேறு எவரையோ இலக்கு வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், குறித்த துப்பாக்கி பிரயோகம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகம் வித்தியா படுகொலை வழக்கை திசை திருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE