வித்தியா கொலைவழக்கு ! வாக்குமூல பிரதியை வழங்க நீதிபதி மறுப்பு

195

timthumb

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவுமாணவி வித்தியாவின் வழக்கில் சந்தேகநபர்களின் வாக்குமூலப் பிரதிகளைகுற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியால் முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகள் குறித்த அறிக்கையினை சட்டமன்றதிணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

அதேவேளை, தங்களது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்சந்தேகநபர்களின் வாக்குமூல பிரதிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றில்கோரியிருந்தனர்.

ஆனால் சந்தேகநபர்களின் வாக்குமூலங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தநீதிபதி, பிரதிகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வழங்க மறுப்புதெரிவித்துள்ளார்.

அதேவேளை, வாக்குமூலப் பிரதிகள் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளநிலையில், மேல் நீதிமன்ற அனுமதியுடன் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது மரபணு அறிக்கை தொடர்பில் சந்தேகநபர்கள் மன்றில்வினவியுள்ளனர். ஆனால் அது தொடர்பிலும் எவ்வித தகவல்களை நீதிபதி வெளியிடமறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், கொலை இடம்பெறுவதற்கு முன்னர் அந்த பிரதேசத்தில் கிராமத்தில் வசித்தகுடும்பங்களின் விபரத்தினை கிராம சேவையாளர் வழங்கி இருந்தார்.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ம் திகதிக்கு நீதவான்ஒத்திவைத்தார்.

SHARE