வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியொகஸ்தர் ஒருவர் இந்தியாவுக்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துநிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

238

 

வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியொகஸ்தர் ஒருவர் இந்தியாவுக்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துநிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உப பரிசோதகராகக் கடமையாற்றியவரும், தற்பொழுது வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உபபொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வருபவருமான ஸ்ரீகஜன் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திருட்டு நகைகளைக் கொள்வனவு செய்பவர்களிடமிருந்து யாழ்ப்பாணப் பொலிஸார் குறிப்பிட்ட ஒருதொகைப் பணத்தை தரகாகப் பெற்றுக்கொள்வதான குற்றச்சாச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. அதன் பின்னர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீகஜன் வல்வெட்டித்துறைக்கு இடமாற்றப்பட்டார். ஆனாலும் இது வழமையான குற்றச்சாட்டு என்றே பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

தற்போதைய சம்பவம் தொடர்பில், வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்பதால் அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழிமறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வித்தியா கொலை வழக்கு தற்போது யாழ் மேல் நீதிமன்றில் ட்ரியல் அட் பார் மன்று முறையில் நடந்துவரும் நிலையில், வழக்கின் சாட்சியாளர்களில் ஒருவரான சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் இந்த பொலிஸ் அதிகாரி தொடர்பாகவும் சாட்சியமளித்திருந்தார்.

அதாவது, வித்தியா கொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை அன்றைய யாழ் பொலிஸ் நிலையத்தின் உபபொலிஸ் பரிசோதகராக இருந்த ஸ்ரீகஜன் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே, அவரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE