வித்தியா படுகொலை வழக்கு! மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்

215

vithy-5

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணைகள் மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

குறித்த வழக்கு இந்த மாத இறுதிப் பகுதியில் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் வை.எம் எம்.றியால் இன்று தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் ஊர்காவல்துறை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

SHARE