விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்! ஹமாஸ் கோரிக்கை மறுத்த அமெரிக்கா

35

 

காசாவில் விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

பரசூட் மூலம் வழங்கப்படும் உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.

இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது.

இருப்பினும், வான் வழியான விநியோகம் என்பது காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடரும் எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

SHARE