விபத்தில் கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த செய்தி வாசிப்பாளர்.!

255

சத்திஸ்கர் மாநிலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் தனது கணவர் சாலை விபத்தில் இறந்ததை நேரலை செய்தியில் வாசித்த சம்பவம் மனதை உருக வைத்துள்ளது.

ஐபிசி 24, தொலைக்காட்சியில் கவுர் (28) கடந்த 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பாக பிலாயைச் சேர்ந்த ஹர்சாத் கவடே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல் கவுர் நேரடி செய்தி வாசித்து கொண்டிருந்தார். அப்போது நிருபர் தொலைபேசியில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் பற்றிய தகவலை நிருபர் தெரிவிக்கவில்லை. இருந்தாலுலம் அவர் தெரிவித்த தகவலை வைத்து உயிரிழந்தது தனது கணவர் என்று உணர்ந்தார்.

கவுரின் கணவரும், அவரது நண்பர்கள் தினமும் அதே வழியில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனத்தில் பயணம் செய்வது வழக்கம். இதனையறிந்த கவுர் மிகவும் மனம் உடைந்து இருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தி நேரம் முடிந்த பின்னரே அங்கிருந்து தனது கணரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். இந்த சம்பவம் அங்கு பணிபுரியும் அனைவரின் மனதையும் உருக வைத்துவிட்டது.

இருப்பினும் கவுர் அமைதியாக செய்தி முழுவதையும் வாசித்து முடித்தார். பிறகு வெளியே வந்துதான் அழுதிருக்கிறார்.

SHARE