விபத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

116

 

கார் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 01 ஆம் திகதி கார் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் ஆராச்சிக்கட்டு, அடிப்பல வீதியில் வைத்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் போபத்தகம பிரதேசத்தில் வசிக்கும் குமாகே யமுனா ருவன்தி (28) எனும் கர்ப்பிணிப் பெண் காயமடைந்திருந்தாள். தனது 8 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும், சந்தேகநபர் சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்தள்ளனர்.

SHARE