பிரேசில் நாட்டில் காயமடைந்த உரிமையாளரை பார்த்து, அவருடைய வளர்ப்பு நாய் துடிதுடித்து கதறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர், புத்தாண்டு தினத்தில் சகோதரி வீட்டிற்கு மதிய உணவு எடுத்து செல்லும்போது சாலையில் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி அளித்து ஆம்புலன்சில் ஏற்றும் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://twitter.com/MailOnline/status/1080477892440743936
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவருடைய வளர்ப்பு நாய், உரிமையாரை பாதுக்காக்கும் விதமாக அவர் மீது ஏறி படுத்துக்கொள்வது, பின்னர் கத்தியபடியே அழுவதுமான செயல்களில் ஈடுபடுகிறது.
காண்போரின் கண்களில் நீரை வரவழைக்கும் விதமாக உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.