விபத்தில் சிக்கிய கார் : இருவர் படுகாயம்

197

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மூதூரிலிருந்து திருகோணமலைக்கு சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, படுகாயங்களுக்குள்ளான இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

SHARE