கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உபதலைவர் பொன்.காந்தன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன் ஆகியோர் இன்று மாலை 2 மணியளவில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து மிகவேகமாக வந்துகொண்டிருந்த வாகனமொன்று பின்புறமாக இவர்களின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, இருவரும் தூக்கி வீசப்பட்டதுடன் பொன்.காந்தன் சிறிய காயங்களுக்குள்ளானார்.
அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது. மேற்படி விபத்தில் இருவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக அந்த விபத்தை நேரடியாக கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.