தமிழகத்தில் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு பயணித்த காரானது லொறியொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தன்னுடைய காரில் யாத்திரைக்காக கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற லொறி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியது.இதில் அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு உயிர் தப்பினார். இந் நிலையில் விபத்து குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.