விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நீதித்துறையை ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளது-பிரதம நீதியரசர்

146
ட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு நீதிக்கட்டமைப்பு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாணவேண்டி உள்ளதென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதுகுறித்து ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, இலங்கையின் நீதித்துறை குறித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, சட்டம் மக்களுடைய நம்பிக்கையை வெற்றிகொள்ள தவறினால் அதன் அடிப்படை விடயங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போகுமெனவும் பிரதம நீதியரசர் இதன்போது தெரிவித்தார்.
SHARE