ஆட்டத்திறன் மோசமாக இருக்கிறது என முகப் புத்தகத்தில் விமர்சித்த ரசிகரை மோசமான வார்த்தையால் திட்டி மிரட்டிய பங்களாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
அண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோசமாகவே ஆடி வருவதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோசமான ஆட்டம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனைக் கண்ட ரசிக ரின் நண்பர் ஷபீருக்கு அதனைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசிகரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்குதல் தொடுப்பதாகவும் மிரட்டியுள்ளார். இவ் விவகாரம் அந் நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இது குறித்து
விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.