விமலையும், கம்மம்பிலவையும் தனிமைப்படுத்திய தினேஷ்

294

சர்வ கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென்ற தீர்மானத்தில் விமல் வீரவங்சவும், உதய கம்மம்பிலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த சார்பு குழுவிலிருந்து சர்வகட்சி கூட்டத்தில் எவரும் கலந்துகொள்வதில்லையென்ற தீர்மானத்துக்கு தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மம்பில ஆகியோர் வந்துள்ளனர்.

இருப்பினும், தினேஷ் குணவர்தன திடீரென கலந்துகொள்ளத் தீர்மானித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

SHARE