இதனால் நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து நாடாளுமன்றம் பத்து நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது
விமல் வீரவன்சவினால் நாடாளுமன்றத்தில் பதற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் விமல் வீரவன்சவின் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஹைபிரைட் நீதிமன்றத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்ட எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்றம் 5 நிமிடங்களுக்கு பிற்போடுவதற்கு பிரதி சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஒரு சூடான விவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் அவரிடம் சபை தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஹைபிரைட் நீதிமன்றம் அவசியமா இல்லையா என கருத்து வெளியிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி இக் கேள்விக்கு இறுதி வரையில் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.