விமானி போல் உடை அணிந்த அஜித் மகன் ஆத்விக்

143

அஜித் சினிமாவில் படம் நடிப்பதை தாண்டி சொந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர். தன் பிள்ளைகள் கேமரா பக்கம் வராதவாரு தெளிவாக பார்த்துக் கொண்டு வருகிறார்.

அண்மையில் அவரது மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் வந்தது, அதை ரசிகர்கள் வழக்கம் போல் கோலாகலமாக கொண்டாடினர். அஜித் மகன் பிறந்தநாளை கொண்டாடினாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில் தான் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதில் குட்டி ஆத்விக் விமானி போல் உடை அணிந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

SHARE