விமான ஓடுபாதையில் மனித உடல்: அதிர்ச்சியில் அதிகாரிகள்

229

அமெரிக்கா விமான ஓடுபாதையில் மனித உடல் ஒன்று மர்மமான முறையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Detroit பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓடுபாதையில் மனித உடல் கிடந்ததை போக்குவரத்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இறந்தவர் 61 வயதுடைய அப்பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், நபரின் அடையாளம் குறித்து பொலிசார் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

மேலும், இறந்தவரின் உறவினர்களை தொடர்பு கொள்ள பொலிசார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இறந்தவரின் உடல் எப்படி விமான ஓடுபாதையில் வந்தது என்ற மர்மம் குறித்தும், மரணத்திற்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE