ஜப்பானில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சம்பவத்தில் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.