விராட் கோலியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வலம் வருகிறார் – முகமது கைப்

137
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியா அணியை வரும் 7ம் திகதி எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வலம் வருகிறார் என முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது – சச்சின் டெண்டுல்கர் ஒரு முழுமையான துடுப்பாட்ட வீரராக ஆக இருந்தார். சச்சினையும் விராட் கோலியையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் கோலிக்கு சில குறைகள் துடுப்பாட்டத்தில் இருந்தது. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள முடியாமல் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

விராட் கோலிக்கு அந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய துடுப்பாட்டம் டெண்டுல்கர் போல் இருக்கிறது.

சுப்மன் கில்லை ஆட்டமிழக்க வைப்பது என்பது மிகவும் கடுமையான விடயமாக தற்போது தெரிகிறது. சுப்மன் கில்லிடம் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் யுக்தியும் மன பலமும் இருக்கிறது.என்று முகமது கைப் கூறியுள்ளார்.

SHARE