புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மார்பகம் தெரியும் வகையில் அவர் உடையணிந்து விரிவுரையாற்றியதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவில் பிறந்து, Baselஇல் வளர்ந்து, சுவிட்சர்லாந்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் 100 பேரில் ஒருவர் என்ற பெயரை பெற்ற Kate Darling, ரோபோ எத்திக்ஸ் துறையில் நிபுணராவார்.
முனைவர் பட்டம் பெற்ற Kate Darlingஐக் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த பிரபல பத்திரிகை ஒன்று, அவர் மார்பகம் தெரியும் வகையில் சட்டையும் இறுக்கமான லெதர் பேண்டும் அணிந்து விரிவுரையாற்றுவதாக எழுதியிருந்தது.
அதற்கு சரியான பதிலடி கொடுத்த Kate Darling, தனது ட்விட்டர் பக்கத்தில், பாலியல் ரீதியான விமர்சனங்கள் ஒழிந்து விட்டதாக ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், இப்போதுதான் பிரபல சுவிஸ் பத்திரிகை ஒன்று எனது மார்பகத்தைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது, என்று தெரிவித்திருந்தார்.
உடனடியாக அந்த பத்திரிகை தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
சரியான விதத்தில் ரெஸ்பான்ஸ் செய்ததற்காக அந்த பத்திரிகைக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் Kate Darling.