விருது வாங்க நடிகை மீனாவுக்கு என்ன தகுதி இருக்கு: வெளுத்து வாங்கிய பிரபல நடிகை

252

உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8 ஆம் திகதி உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் மார்ச் 11 ஆம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விழாவை கொண்டாடுவதில் மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணிக்கும், முன்னாள் எம்.எல்.ஏ.யசோதாவுக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு அணிகளாக பிரிந்து நின்றே மகளிர் தின கொண்டாட்டங்களை இருவரும் செய்து வருவதாகவும், ஜான்சிராணிக்கு போட்டியாக தான் நடத்தும் மகளிர் தின விழாவை பிரமாண்டமாக நடத்த யசோதா திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் நடிகையர், நடிகர்கள் என பலரையும் அவர் அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் நடிகைகள் கே.ஆர். விஜயா, ஜெயசித்ரா, மீனா போன்ற நடிகைகள் விழாவுக்கு வர ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகளுக்கு விருது ஒன்றையும் யசோதா வழங்குகிறார். மறைந்த காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி பெயரில் வழங்கப்படும் விருது நடிகை மீனாவுக்கும் வழங்கப்படும் என்று யசோதா முடிவு செய்து அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் தெரியாமல் யசோதா நடத்தும் மகளிர் தினவிழாவிற்கு முதலில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்ட நடிகை நக்மா, தற்போது, மீனாவுக்கு விருது என்ற விஷயம் தெரிந்துவிட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு வர விருப்பமில்லை என்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மீனாவிற்கு விருது கொடுப்பது தொடர்பான தகவல் கிடைத்த உடன் நக்மா, என்னிடம் சொல்லாமல் மீனாவுக்கு எப்படி விருது வழங்க முடிவு செய்தீர்கள் இந்திராகாந்தி பெயரில் விருது பெறும் அளவுக்கு கட்சிக்கு மீனா என்ன தியாகம் செய்திருக்கிறார் என யசோதாவுக்கு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

SHARE