விரைவில் அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை – ஆர்.எம்.எஸ் சரத்குமார

565
புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னர், அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் கூறியுள்ளார்.

புதிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வது தொடர்பிலான விதிமுறைகள் வரத்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இலத்திரனியல் அடையாள அட்டைக்காக விரல் அடையாளங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. மக்களுக்கு வழங்கவிருக்கும் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையின் இலக்கங்கள் 9 – 12 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Department-of-registration-persons

SHARE