விலகும் கடிதத்தில் கையொப்பமிட்டார் பிரித்தானிய பிரதமர்

178

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமெனவும் அந்நாட்டில் எழுந்த கோரிக்கைக்கேற்ப,விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் திரேசா மே.

ஐரோப்பியஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென 48.1 சதவீதமனோரும், விலக வேண்டுமென 51.9 சதவீதமனோரும் வாக்களித்தனர். குறித்த தீர்மானத்திற்கெதிராகவிருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகவே, தெரசா மே பிரித்தானிய பிரதமராகி, பிறெக்சிட் சட்டவரைபை அமுல்படுத்துபவதற்கு பல்வேறுப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

இச்சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை, அதன் நட்பு நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல், சீன ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டாமென கோரிவந்தனர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து தெரேசா மே, அந்நாட்டு மக்களின் முடிவு தொடர்பாக பாராளுமன்றின் இரு அவைகளிலும் ஏற்படுத்திய கடும் விவாதத்தினை தொடர்ந்து மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்வதென பாராளுமன்றம் அண்மையில் முடிவுசெய்து பிறெக்சிட் சட்டவரைப்பிற்கு அங்கீகாரம் அளித்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கடிதத்தில், பிரதமர் தெரசா மே கையொப்பமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் புருசெல்ஸ்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம், குறித்த கடிதம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE