
ஐபோன் 11 ப்ரோ
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் XR மற்றும் ஐபோன் XS உள்ளிட்டவற்றுக்கு அமலாகி உள்ளது.
இந்தியாவில் மொபைல் போன்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி 12 இல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களின் விலையை கடந்த மாதம் ஆப்பிள் உயர்த்தியது. இறக்குமதி உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டது.

ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஐபோன்களுக்கான வரி 5.15 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் எம்ஆர்பி விலையில் விற்பனை செய்து வந்தாலும், சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் சற்றே குறைந்த விலையில் ஐபோன்களை விற்பனை செய்கின்றன. மேலும் ஆன்லைனிலும் குறைந்த விலையில் ஐபோன்களை வாங்கிட முடியும்.
ஆப்பிள் தவிர போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலையும் ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர சாம்சங், ஒப்போ, விவோ, ரியல்மி, ரெட்மி மற்றும் ஐகூ என பெரும்பாலான நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கின்றன.