தன்ஷிகா பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து மாஞ்சா வேலு, அரவான் ஆகிய படங்களில் நடித்தாலும் கபாலியில் இவர் நடித்த யோகி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இதை தொடர்ந்து இவர் சினம் என்ற குறும்படத்தில் விலை மாதுவாக நடித்துள்ளாராம், இந்த குறும்படம் 20 நிமிடம் ஓடும் என கூறப்படுகின்றது.
இந்த குறும்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். இதற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.