ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் 40 பேர் அடங்கிய குழு, பிறேசில் சென்றதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி செலவில் 28 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றதாகம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் குழு தொடர்பில் தான் பயப்படப் போவதில்லை. ஒலிம்பிக் குழு தவறு செய்தால் அமைச்சருக்கு உள்ள அதிகாரம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சாசனத்தின் நிலைமைக்கு அமைய எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தன்னால் எடுக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.